உடலிற்கு சத்தான கொள்ளு தோசை.., இலகுவாக செய்வது எப்படி?
கொள்ளு என்பது அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட ஒரு சத்தான பருப்பு வகை.
இது உடல் எடை குறைப்பு, எலும்பு வலுவூட்டல் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
அந்தவகையில், உடலிற்கு சத்தான கொள்ளு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- கொள்ளு- ½ கப்
- உளுத்தம் பருப்பு- ¼ கப்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- அவல்- ¼ கப்
- உப்பு- தேவையான அளவு
- தண்ணீர்- தேவையான அளவு
- எண்ணெய்- சிறிதளவு
- நெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.
பின்பு அவலை கழுவி 30 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இவை அனைத்தையும் நன்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
பின்பு மாவை நன்கு கலந்துவிட்டு, தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து சிறிதளவு மாவை ஊற்றவும்.
இறுதியாக நெய் ஊற்றி பொன்னிறமானதும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவிட்டு எடுத்தால் கொள்ளு தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |