உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு சாதம்.., எப்படி செய்வது?
கொள்ளு என்பது அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட ஒரு சத்தான பருப்பு வகை.
இது உடல் எடை குறைப்பு, எலும்பு வலுவூட்டல் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
அந்தவகையில், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு- ½ கப்
- பச்சரிசி- 1 கப்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- நெய்- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 2
- பூண்டு- 10 பல்
- பச்சை மிளகாய்- 3
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- சீரக தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 2 ஸ்பூன்
- தக்காளி- 3
- கறிவேப்பில்லை- 2 கொத்து
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- தண்ணீர்- 3 கப்
செய்முறை
முதலில் கொள்ளு பருப்பை நன்கு கழுவி 8 மணி நேரம் மற்றும் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கடலை பருப்பு, கடுகு, சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து வறுக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதற்கடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூள் சேர்த்து, நன்கு வதக்கவும்.
பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி ஊறவைத்த கொள்ளு பருப்பு மற்றும் அரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.
இறுதியாக இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்தால் சுவையான கொள்ளு பருப்பு சாதம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |