தூக்கத்திலேயே கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த இரவுநேர பானம் செய்து குடியுங்கள்
கொள்ளு சாப்பிடுவதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
வாரத்திற்கு 3 நாட்கள் இந்த கொள்ளு சூப்பை எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள தேவையில்லா கொழுப்புகளை எல்லாம் கரைத்துவிடும்.
மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.
இந்த பானத்தை இரவு உணவு சாப்பிட்ட பிறகு இளம் சூட்டில் பருகிவர வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரண்டு அல்லது மூன்று நாள் குடிக்கலாம்.
கொள்ளு சூடு என்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம். இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு- 50 கிராம்
- பூண்டு- 2 பல்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- மிளகு- ஒரு ஸ்பூன்
- சீரகம்- ஒரு ஸ்பூன்
- பிளாக் சால்ட்- தேவையான அளவு
செய்முறை
ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொள்ளுவை போட்டு நிறம் மாறும் வரை வறுத்து ஆற வைக்க வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து கொள்ளுடன் சேர்த்து மிக்சி ஜாரில் பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பல் துருவிய பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
அடுத்து இதில் அரைத்து வைத்திருந்த மிளகு, சீரக, கொள்ளுபொடியை 2 ஸ்பூன் அளவுக்கு சேர்க்க வேண்டும்.
பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். அடுத்து இதனை ஒரு வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி அதில் சிறிதளவு பிளாக் சால்ட சேர்த்து குடிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |