கொரியன் பெண்களை போல் அழகாக இருக்க இதை செய்தால் போதும்!
பொதுவாகவெ பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்பது ஒரு ஆசையாக தான் இருக்கும். தன்னை விட ஒல பெண்ணை பார்த்துவிட்டால் பொறாமைப்படுவதும் வழக்கம்.
அதுப்போலவே தற்போதைய பெண்கள் கொரியன் பெண்களை பார்த்து பொறாமைப்படுகிறார்கள். காரணம் அவர்களின் சருமம் தான்.
கொரியன் பெண்களின் சருமமானது பளிச்சென்று இருக்கும். முகத்தில் எந்தவொரு புள்ளியும் இல்லாமல் தெளியவாக வைத்திருப்பார்கள். ஆகையால் தற்போதைய பெண்கள் கொரியன் பொண்களை போல் இருக்க வேண்டும் என்று எண்ணி பல க்ரீம்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அவ்வாறு செய்வதனால் சருமத்தில் ஒவ்வாமை தான் அதிகம் ஏற்படும். ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி இயற்கையான முறையில் கொரியன் பெண்களை போல் மாறலாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அரிசி நீர்...
அரிசி நீரானது அனைவரது வீட்டிலும் இலகுவாக கிடைக்கும் ஒரு திரவமாகும். இது சருமத்திற்கு மட்டுமல்லாமல் முடியின் வளர்ச்சிக்கு உதவிய வண்ணத்திலேயே இருகிறது.
இது முகத்திற்கு எப்படி நன்மையளிக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
முகத்திற்கு டோனர்
அரிசி நீரை உங்கள் சருமத்திற்கு டோனராக பயன்படுத்தலாம். முகத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும். காட்டன் துணியில் அரிசி தண்ணீரை நனைத்து உங்கள் முகத்தில் நன்கு தடவுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர முகத்தில் மாற்றத்தை நீங்களே உணரலாம்.
முகத்தை சுத்தப்படுத்த
முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும். எப்போது பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ் உடன் இந்த அரிசி தண்ணீரை கலந்து பயன்படுத்தி வர சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |