கொரியன் பெண்களின் அழகின் ரகசியம்.., இந்த Facepack-ஐ பயன்படுத்துங்கள்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
தற்போது கொரியன் உணவு, கொரியன் சீரிஸ் மற்றும் கொரியன் பாடல்கள் மிகவும் வைரலாகி வருகிறது.
அந்தவகையில், கொரியன் அழகு குறிப்புகளும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.
கொரியன் பெண்களின் அழகு பராமரிப்பு முறையில் இந்த Facepack அதிக நன்மை தருகிறது. இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
- மோர்- தேவயான அளவு
பயன்படுத்தும் முறை
முல்தானி மிட்டியுடன் மோர் சேர்த்து கலந்து இதனை முகத்தில் தடவவேண்டும்.
30 நிமிடங்களுக்கு பின்னர் இதனை நன்கு மசாஜ் செய்து கழுவவும்.
முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்கு, மற்றும் பருக்களை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
2. தேவையான பொருட்கள்
- அன்னாசி- 4 துண்டுகள்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
அன்னாசி பழ துண்டுகளை நன்றாக அரைத்து விழுது எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடவும்.
வைட்டமின் சி நிறைந்த அன்னாசியை பயன்படுத்துவதின் மூலம் சருமத்தில் பலனை பெறலாம்.
3. தேவையான பொருட்கள்
- காபி தூள்- 1 ஸ்பூன்
- வெள்ளை சர்க்கரை- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
காபி தூள், வெள்ளை சர்க்கரை, மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவவும்.
எலுமிச்சை ஒவ்வாமை இருப்பவர்கள் அதற்கு மாற்றாக தக்காளி சாறு பயன்படுத்தலாம்.
4. தேவையான பொருட்கள்
- தக்காளி- ½
- உருளைக்கிழங்கு- ½
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
தக்காளி பழம், உருளைக்கிழங்கு, மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு ஒவ்வாமை இருப்பவர்கள் அதற்கு மாற்றாக 1 ஸ்பூன் மசூர் பருப்பை 2 மணி நேரம் உற வைத்து சேர்த்து அரைத்து கொள்ளலாம்.
இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, நல்ல பலனையும் தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |