லண்டன் வங்கியில் வேலை பார்த்தவர்.. இன்று Kotak Mahindra Bank -யை வழிநடத்துகிறார்: யார் அவர்?
வங்கி தொழிலில் பெரிய புரட்சியை ஏற்படுத்திய Kotak Mahindra Bank -ன் தலைமை செயல் அலுவலராக பொறுப்பு வகிப்பவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் அவர்?
உழைப்பால் உயர்ந்தவர்கள் வெற்றிக்கதையை நாம் பாடமாக வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட ஒருவர் தான் இவரும். Kotak Mahindra Bank -ன் தலைமை செயல் அலுவலராக பொறுப்பு வகிக்கும் அசோக் வி வாஸ்வானியை (Ashok Vaswani) பற்றி தான் பார்க்க போகிறோம்.
இவர் மும்பையில் உள்ள Sydenham வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும், அமெரிக்க - இஸ்ரேலிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த நிதி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் வங்கி பணிகளில் சிறந்து விளங்கியுள்ளார்.
அரசு வேலையை விட்டு சொந்த தொழில் தொடங்கியவர்.. இன்று ரூ.6,17,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்துக்கு அதிபதி
ஆரம்பத்தில் சிட்டி குழுமத்தில் பணிபுரிந்துள்ளார். மேலும், லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குழுமம், பிரிட்டனின் எஸ்பி ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றின் தலைமை பொறுப்பிலும் இருந்துள்ளார். குடும்பத்தை பொருத்த வரை வீணா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
Kotak Mahindra Bank
Kotak Mahindra Bank -ல் பொறுப்பேற்பதற்கு முன்பாக Ashok Vaswani, இங்கிலாந்தில் உள்ள Barclays வங்கியில், தலைமை நிர்வாக அலுவலராக இருந்தார். தற்போது Kotak Mahindra Bank -ன் சந்தை மதிப்பு ஜனவரி 1, 2024 -ன் படி ரூ.3,80,000 கோடியாகும்.
இந்த வங்கியை தலைமை பொறுப்பில் இருந்து Ashok Vaswani வழிநடத்துகிறார். இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியாக இருக்கும் Kotak Mahindra 1,780 கிளைகளையும், 2,963 ஏடிஎம் இயந்திரங்களையும் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |