தக்காளியுடன் கொத்தமல்லி சேர்த்து சட்னி செய்வது எப்படி?
Tomato
Idli
By Kirthiga
பொதுவாகவே இட்லி தோசை போன்ற உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது வழக்கம்.
இந்த உணவை சாப்பிடுவதற்கு பலரும் சட்னியை தான் தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் என்ன தான் சுவையாக சட்னி செய்தாலும் ஒரே சுவையில் இருப்பதை வீட்டில் இருப்பவர்கள் விரும்ப மாட்டார்கள்.
எனவே இந்த முறை கொத்தமல்லி வைத்து எப்படி சுவையான கொத்தமல்லி சட்னி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி கொத்தமல்லி சட்னி
- தக்காளி - 6
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
- தனியா - 1 மேசைக்கரண்டி
- பூண்டு - 6
- பச்சை மிளகாய் - 6
- புளி
- கொத்தமல்லி இலை - 1 கப்
- புதினா இலை - 1/2 கப்
- மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 4
- கறிவேப்பிலை
- பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், தனியா, நறுக்கிய தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்பு புளி சேர்த்து கலந்து, பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு புதினா இலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
- பின்பு ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் இன்றி விழுதாக அரைக்கவும்.
- தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து பின்பு சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US