ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ்.., இன்ப அதிர்ச்சி கொடுத்த கோயம்புத்தூர் ஐடி நிறுவனம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்குவதாக இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ரூ.14.5 கோடி போனஸ்
சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கோவை.கோ (Kovai.co) என்கிற முன்னணி ஐடி நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கோவை.கோ என்பது B2B SaaS (Software as a Service) ஐடி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை நிறுவியவர் சரவண குமார் ஆவார். தற்போது, இந்நிறுவனத்தில் சுமார் 140 ஊழியர்களுக்கு போனஸாக $1.62 மில்லியன் (ரூ. 14.5 கோடி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஒன்றாக நாங்கள் வளர்கிறோம்" போனஸ் என்ற திட்டத்தின் கீழ், 31 டிசம்பர் 2022 அன்று அல்லது அதற்கு முன் நிறுவனத்தில் சேர்ந்த அனைத்து ஊழியர்களும், மூன்று வருட சேவையை முடித்தவுடன், அவர்களின் மொத்த வருடாந்திர சம்பளத்தில் 50% போனஸாகப் பெறுவார்கள்.
இதில் முதற்கட்டமாக ஜனவரி 31 அன்று சுமார் 80 பேர் சம்பளப் பணத்தின் ஒரு பகுதியாக போனஸை பெற்றுள்ளார்கள்.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் சரவணக்குமார் கூறுகையில், "UK மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்ட Kovai.co, 2022 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் லாபத்தை அதன் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, தற்போதுள்ள மற்றும் புதிய பணியாளர்கள் அனைவருக்கும் 'Together We Grow bonus' அறிவித்தது.
நிறுவனத்தின் வெற்றி மற்றும் லாபத்திற்கு பங்களிக்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.
செல்வத்தைப் பகிர்வதற்கும் விநியோகிப்பதற்கும் வழிகளைக் கொண்டு வர வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.
நாங்கள் ஊழியர்களுக்கு நேரடியாக பணத்தை போனஸ் அடிப்படையில் வழங்க முடிவு செய்தோம். அவர்கள் வங்கி கடனை அடைப்பதற்கும், வீடு வாங்க முன்பணம் செலுத்துவதற்கும், அவர்களின் தேவைக்கேற்ப முதலீடு செய்ய இதைப் பயன்படுத்தலாம்" என்றார்.
Kovai.co என்பது B2B பல தயாரிப்பு நிறுவன SaaS நிறுவனமாகும். அதன் போர்ட்ஃபோலியோவில் BizTalk360, Document360 மற்றும் Turbo360 ஆகிய மூன்று தயாரிப்புகள் உள்ளன.
அவர்களின் தயாரிப்புகள் உலகளவில் 2,500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
பூட்ஸ்ட்ராப் (bootstrapped) செய்யப்பட்ட நிறுவனம் 2023 இல் $16 மில்லியன் டாலர் ஆண்டு வருவாயை தாண்டியது. 260க்கும் மேற்பட்டோரைக் கொண்ட கொண்ட இந்த நிறுவனம் லண்டன், UK, சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |