சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கோவைக்காய்! இப்படி கிரேவி வைத்து சாப்பிடுங்க
மிக எளிதாக கிடைக்கக்கூடிய கோவைக்காயில் உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
நீரிழிவு நோயாளிகள் அவசியம் சாப்பிடக்கூடியது கோவைக்காய், இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன் சிறுநீரகம் அதிகம் போவதை கட்டுப்படுத்துகிறது.
பற்கள் தொடர்பான பிரச்சனைகளையும், உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளையும் கரைக்கிறது.
இதை வைத்து சுவையான கிரேவி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோவைக்காய்- 250 கிராம்
நிலக்கடலை- வறுத்தது
தேங்காய்- சிறிதளவு
கசகசா, மிளகு, சீரகம், மல்லி- ஒரு டீஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு- 2
வெங்காயம்- 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி- 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட்- தேவையான அளவு
மிளகாய் தூள், மஞ்சள் தூள்- தேவையான அளவு
புளி- நெல்லிக்காய் அளவு
செய்முறை
நிலக்கடலை, தேங்காய், கசகசா, மிளகு, சீரகம், மல்லி போன்றவற்றை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக சுத்தம் செய்த கோவைக்காயை உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கோவைக்காயை வதக்கி எடுக்கவும், அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும், அடுத்ததாக தக்காளி சேர்க்கவும்.
நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மசாலா பொருட்கள் சேர்த்து கிளறவும், மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் போது கோவைக்காயை சேர்க்கவும், இதில் புளிக்கரைசலை சேர்த்து வேக விடவும்.
தேவையான அளவு தண்ணீர் மட்டும் சேர்த்து கொதிக்கவிடவும், நன்றாக தண்ணீர் வற்றியதும் கிரேவி தயாராகிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |