உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கோவக்காய் துவையல்.., எப்படி செய்வது?
உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு சிறந்த காய்கறி கோவக்காய் ஆகும்.
கோவைக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும், இது நீரிழிவு கட்டுப்பாடு, கல்லீரல் ஆரோக்கியம், உடல் எடை குறைப்பு மற்றும் செரிமானத்திற்கு உதவும்.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கோவக்காய் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோவக்காய்- ¼ kg
- தனியா- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- வேர்க்கடலை- 2 ஸ்பூன்
- வெள்ளை எள்- 1 ஸ்பூன்
- பூண்டு- 8 பல்
- பச்சை மிளகாய்- 10
- புளி- சிறிதளவு
- தக்காளி- 1
- கல் உப்பு- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் வாணல் வைத்து தனியா, சீரகம், வேர்க்கடலை, வெள்ளை எள் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
பின் அதே வாணலில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய கோவைக்காயை சேர்த்து வதக்கி, புளி, நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

இதற்கடுத்து இதனை மூடி மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து பின் முழுமையாக ஆறவிடவும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலா, வதக்கிய கலவை மற்றும் வேகவைத்த கோவைக்காய் கலவையை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இறுதியாக எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கோவைக்காய் துவையலில் சேர்த்து கலந்து சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |