பொங்கல் ஸ்பெஷல்: கோவில்களில் தரப்படும் சர்க்கரை பொங்கல்.., வீட்டிலேயே ஈசியா செய்யலாம்
கோயிலில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கல் என்றாலே தனிச்சுவை தான்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கலுக்கு தனி பிரியர்களே இருக்கின்றனர்.
கோவில்களில் தரப்படும் சர்க்கரை பொங்கலை எப்படி வீட்டிலேயே ஈசியா செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை அரிசி- 350g
- வெல்லம்- 1050g
- நெய்- 450ml
- முந்திரி- 200g
- உலர் திராட்சை- 100g
- ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து வந்ததும் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
அரிசி நன்கு வெந்து வந்ததும் அதில் உள்ள தண்ணீரை வடித்து பின் சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து சாதத்தை நன்கு கிளறி பின் வெல்லம் சேர்த்து கிளறவும்.
வெல்லம் நன்கு கரைந்து கெட்டியாகி வந்ததும் இதில் நெய் ஊற்றி கிளறவும்.
இறுதியாகி இதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோவில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |