தித்திக்கும் சுவையில் கொழுக்கட்டை.., இலகுவாக செய்வது எப்படி?
பண்டிகை காலங்களில் இருந்தே வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்யக்கூடியது இனிப்பு தான்.
கொழுக்கட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஓர் இனிப்பு வகை.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை- 100g
- வெல்லம்- 150g
- நெய்- தேவையான அளவு
- தேங்காய்- 1 மூடி
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- இடியாப்ப மா- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும் துருவிய தேங்காய், வெல்ல பாகு, ஒன்றும் பாதியாக அரைத்த வேர்க்கடலை சேர்க்கவும்.
பின் இது கொஞ்சம் கெட்டியாகி வந்ததும் அதில் நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பூரணத்தை கிளறி இறக்கவும்.
பின்னர் இடியாப்பமாவில் உப்பு மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து மாவை வட்டமாக தேய்த்து அதனுள் பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்துவிடவும்.
பின் பிடித்து வைத்த கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |