ஸ்ரீசரணி, கிராந்தியின் மிரட்டலில் சுருண்ட ஜிம்பாப்வே: பிரதிகா அதிரடி அரைசதம்
Zimbabwe women 197 runs allout vs india: இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே 197 ஓட்டங்களுக்கு சுருண்டது.
வதோதராவில் நடந்து வரும் இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே மகளிர் அணி 197 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
முதல் ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 197 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பிலோவ்ட் பிஸா (Beloved Biza) 62 ஓட்டங்கள் எடுத்தார்.
ஸ்ரீசரணி 4 விக்கெட்டுகளும், கிராந்தி கௌட் 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளும், ஷபாலி வெர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ம்ரிதி மந்தனா 32 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடியில் மிரட்டிய பிரதிகா ராவல் (Pratika Rawal) 9வது அரைசதம் விளாசினார்.
