பிரித்தானியாவுக்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை எடுக்கும்! தூதர் எச்சரிக்கை
மாஸ்கோவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை எடுக்கக்கூடும் என பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரி கெலினே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Donetsk மற்றும் Lugansk மக்களை பாதுகாக்க, உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க பிரித்தானியா செய்துள்ளால், அந்நாட்டுனான உறவை முறித்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய தூதர் ஆண்ட்ரி கெலின் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதார தடைகளால் தடைப்பட்டுள்ள தூதரகத்திற்கான நிதி பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், மாஸ்கோவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு எதிராக ரஷ்யா நடவ்டிக்கை எடுக்கக்கூடும்.
தற்போதைக்கு, ரஷ்ய தூரதக மையங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன.
வழக்கம் போல் நாங்கள் பணியாற்றி வருகிறோம், எந்தவித சேவையையும் நாங்கள் ரத்து செய்யவில்லை என பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரி கெலின் தெரிவித்துள்ளார்.