கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உப்பு சீடையை எளிய முறையில் செய்வது எப்படி?
மற்ற வழிபாட்டுப் பொருட்களைத் தவிர, பஞ்சாமிர்தத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை வந்துவிட்டது. இந்த நாளில், லட்டு கண்டிப்பாக பஞ்சாமிர்தம் என்பவை பிரசாதத்திற்கு தயாராக இருக்கும்.
பஞ்சாமிர்தம் பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஆகிய ஐந்து பொருட்களால் செய்யப்பட்ட உணவுகள் பிரதாகமாக வழங்கப்படுகிறது. அந்தவகையில் உப்பு சீடையும் ஒன்று தான். அதை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து - 2 மேசைக்கரண்டி
- அரிசி மாவு - 1 கப்
- எள்ளு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
- வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- தண்ணீர்
- எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
1. கடாயில் உளுந்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின்பு நன்கு ஆறவிட்டு பொடியாக அரைத்து எடுக்கவும்.
2. அதே கடாயில் அரிசி மாவை சேர்த்து 5 நிமிடம் வறுத்து எடுக்கவும்.
3. பின்பு இரண்டு மாவையும் சலித்து அதில் எள்ளு, சீரகம், உப்பு , பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிடவும்.
4. பிறகு வெண்ணெய் சேர்த்து கலந்து அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
5. பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பேப்பரில் 10 நிமிடம் வைக்கவும்.
6. பிறகு தேங்காய் எண்ணையை சூடு செய்து அதில் உருட்டிய மாவை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான உப்பு சீடை தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |