கிருஷ்ண ஜெயந்தி: அதிர்ஷ்டம் பெருக கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?
மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமே கிருஷ்ண அவதாரமாகும்.
கிருஷ்ணராக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கிருஷ்ண ஜெயந்தியை காலை நேரத்தில் வழிபடுவதை விட மாலை நேரத்தில் வழிபடுவதே சிறந்ததாகும்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று முழுவதும் விரதம் இருந்து மாலை வேளையில் பூஜையை தொடங்கி இரவு முழுவதும் பூஜைசெய்து மறுநாள் காலையில் பூஜை நிறைவு செய்யவேண்டும்.
மேலும், கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக படைத்தவற்றை முதலில் சாப்பிட்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி திங்கட்கிழமை நாளில் வருகிறது.
இந்நாளில் அனைவரும் கிருஷ்ணரை வீட்டிற்கு வரவழைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று அதிகாலையிலேயே வீட்டினை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட வேண்டும்.
மாவிலை, தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களினால் அலங்காரம் செய்யவேண்டும்.
பின்னர் அரிசிமாவினால் குழந்தையின் கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை பதிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் கிருஷ்ணனை நம் வீட்டிற்குள் அழைத்து வருவதாக நம்பிக்கை.
வீட்டில் கிருஷ்ணர் சிலை, அல்லது கிருஷ்ணர் படம் இருந்தால் அதனை சுத்தம் செய்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பூஜைக்கு நெய்வேத்தியமாக வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பலகாரங்களை செய்து படைக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |