பல லட்சங்களுக்கு அதிபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நகைத்தொழில் செய்து வந்த இவர் இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது அறையில் இருந்து சத்தம் கேட்டு ஓடி வந்த சுரேஷின் மனைவி, குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இறந்துகிடந்த அவரது நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சொந்த துப்பாக்கி
அதன் பின்னர் நடந்த விசாரணையில் சொந்தமாக உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் சுரேஷ் தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிய வரவில்லை. பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சுரேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது இறப்பு செய்தி அறிந்து வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Representative image/PTI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |