நீண்ட நாள் தோழியை திருமணம் செய்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட் தனது தோழியை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கிறிஸ்டன் ஸ்டீவர்ட்
ஹாலிவுட்டில் Twilight திரைப்படத் தொடரில் நடித்து பிரபலமான நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட் (Kristen Stewart).
35 வயதாகும் இவர், 2000ஆம் ஆண்டு முதல் குறும்படங்கள், ஆவணப்படம் உட்பட 50 படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன் தொலைக்காட்சி தொடர்கள், இசை வீடியோக்களில் நடித்துள்ளதுடன், 6 வீடியோக்களை இயக்கியும் உள்ளார்.
தோழியுடன் காதல்
தனது திரை வாழ்க்கையில் 72 விருதுகளை வென்றுள்ள கிறிஸ்டன் ஸ்டீவர்ட், தனது தோழி டைலன் மேயரை (Dylan Meyer) காதலித்து வந்துள்ளார்.
கடந்த 2019யில் மேயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்டன் ஸ்டீவர்ட் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தங்கள் உறவை உலகிற்கு வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் 2021ஆம் ஆண்டில் திருமண நிச்சயம் செய்துகொண்டனர்.
திருமணம்
இந்த நிலையில் ஈஸ்டர் நாளில் கிறிஸ்டன் ஸ்டீவர்ட் - டைலான் மேயர்ஸ் ஜோடி திருமணம் செய்துகொண்டது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு தனியார் விழாவில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்ததாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |