கொலையாளிகள், போதைப்பொருட்களால்..இந்த நாடுகளுக்கு எல்லாம் தடை விதிக்கவேண்டும்: கிறிஸ்டி
அமெரிக்காவை கொலையாளிகள், போதைப்பொருட்களால் நிரப்பும் நாடுகள் மீது முழு பயணத்தடை விதிக்க வேண்டும் என்று உள்துறை பாதுகாப்பு செயலாளர் ட்ரம்பிடம் முறையிட்டுள்ளார்.
குடியேற்றங்களை நிறுத்துவதாக அறிவித்த ட்ரம்ப்
கடந்த வாரம் வாஷிங்டன் டிசியில் இரண்டு தேசிய காவல்படை உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடந்தது. 
அதனைத் தொடர்ந்து, அகதி அந்தஸ்து குறித்த முடிவுகள் உட்பட ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அனைத்து குடியேற்றங்களையும் நிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவை 'கொலையாளிகள், குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களால் நிரப்பும் நாடுகள் மீது முழு பயணத்தடை விதிக்க வேண்டும் என்று, உள்துறை பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) சந்தித்தபோது பேசியதாக முழு பயணத் தடை விதிக்கும் தனது திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். 
முழு பயணத் தடை விதிக்க பரிந்துரைக்கிறேன்
அவர் சமூக ஊடங்களில், "நான் இப்போதுதான் ஜனாதிபதியை சந்தித்தேன். நம் நாட்டை கொலையாளிகள், லீச்சுகள் மற்றும் போதைப்பொருட்களால் நிரப்பி வரும் ஒவ்வொரு மோசமான நாட்டிற்கும் முழு பயணத் தடை விதிக்க பரிந்துரைக்கிறேன்" என்று எழுதினார்.
மேலும் அவரது பதிவில், 'நமது முன்னோர்கள் இந்த நாட்டை இரத்தம், வியர்வை மற்றும் சுதந்திரத்தின் மீதான அசாத்திய அன்பின் மீது கட்டமைத்தனர்.
வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் நமது ஹீரோக்களைக் கொல்வதற்கோ, நம் கடின உழைப்பால் சம்பாதித்த வரி டொலர்களை உறிஞ்சுவதற்கோ அல்லது அமெரிக்கர்களுக்குக் கொடுக்க வேண்டிய சலுகைகளைப் பறிப்பதற்கோ அல்ல. நாங்கள் அவர்களை விரும்பவில்லை' என்று குறிப்பிட்டார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |