மீண்டும் சொதப்பிய ஷ்ரேயாஸ்..RCBக்கு 158 இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் 157 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
க்ருனால், சுயாஸ் அபாரம்
சண்டிகரில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 37வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா 22 (15) ஓட்டங்களில் வெளியேறினார்.
Safe to say it's been Krunal Pandya's day so far ☀️
— IndianPremierLeague (@IPL) April 20, 2025
Rate this superb catch by the #RCB all-rounder 🔢
Updates ▶ https://t.co/6htVhCbltp#TATAIPL | #PBKSvRCB | @krunalpandya24 pic.twitter.com/CSaAgOACvr
அடுத்து அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங்கை 33 (17) ஓட்டங்களில் க்ருனால் பாண்டியா ஆட்டமிழக்க செய்தார்.
மார்கோ ஜென்சன் அதிரடி
அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 6 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, வதேரா (5) மற்றும் ஸ்டோய்னிஸ் (1) ஆகியோர் சொதப்பினர்.
எனினும் ஜோஷ் இங்கிலிஷ் 29 (17) ஓட்டங்களும், ஷஷாங்க் சிங் 31 (33) ஓட்டங்களும் விளாசினர். கடைசி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட மார்கோ ஜென்சன் 20 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. க்ருனால் பாண்டியா, சுயாஸ் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும், ஷெப்பர்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 20, 2025
Commendable effort from #RCB to restrict #PBKS to 157/6.
Which way is this going? 🤔
Scorecard ▶ https://t.co/6htVhCbTiX#TATAIPL | #PBKSvRCB pic.twitter.com/FoxNAKMMOU
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |