பொல்லார்டுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய குருணால் பாண்ட்யா! வீடியோ
பொல்லார்டு விக்கெட்டை வீழ்த்தியதும் லக்னோ வீரர் குருணால் பாண்ட்யா அவருக்கு தலையில் முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்த வீடியோ வைரலாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது. குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அவர் பொல்லார்டின் விக்கெட்டை வீழ்த்தியவுடன், அவருக்கு அருகில் சென்று விளையாட்டாக முதுகில் குத்தி, தலையில் முத்தம் கொடுத்து பெவலியனுக்கு செல்லுமாறு கூறினார். பொல்லார்டு அவுட் ஆன விரக்தியில் இருந்தாலும் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
Krunal pic.twitter.com/UNIg2Vnw5K
— Big Cric Fan (@cric_big_fan) April 24, 2022
குருணால் இவ்வாறு நடந்து கொண்டதற்கு எந்தவித மெமோவும் கொடுக்கப்படவில்லை. மேலும் அவர் இவ்வாறு செய்தது சரி அல்ல என வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பொல்லார்டும், பாண்ட்யாவும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.