கே.டி.ராகவனுடன் வீடியோ காலில் பேசியது என் மனைவி தான்! வெளியான பகிர் தகவல்
கே.டி ராகவனிடம் வீடியோ காலில் பேசியது தனது மனைவி என்று ஒருவர் பேட்டி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல சர்ச்சைக்கு ஆளாகிய ராகவன் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவரது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது கே.டி.ராகவனுடன் வீடியோ காலில் பேசியது தனது மனைவி என்று ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். வழக்கறிஞராக இருந்த எனது மனைவியை பாஜகவில் சேருமாறு ஆசையை தூண்டினார்கள்.
இதையடுத்து அவருக்கு கட்சியில் கலை, கலாச்சார பிரிவில் மாவட்ட செயலாளராக கே.டி. ராகவன் பதவியை வழங்கினார். இதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரண பேச்சில் தொடங்கி பிறகு ராகவன் தனது மனைவியிடம் செல்போன் எண்ணை கொடுத்தார்.
கடந்த ஆக்டோபர் மாதம் அரை நிர்வாணத்துடன் என் மனைவி கே.டி.ராகவனுடன் வீடியோ காலில் பேசினார். பாஜகவில் தலித்பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவதாகவும் அதில் எனது மனைவியும் சிக்கி கொண்டதாக கூறினார்.