மீனவர் ராஜ்கிரண் சடலத்தை உடற்கூறாய்வு செய்யாதது ஏன்? அரசு உண்மையை மறைக்கிறதாக? குடந்தை அரசன் பரபரப்பு நேர்காணல்
புதுக்கோட்டையை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக விடுதலை தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த குடந்தை அரசன், பல விதமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 பேரும், கடந்த 19-ஆம் திகதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்கள் எல்லை மீறியதாக அங்கு வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளனர்.
அதன்பிறகு தங்களது ரோந்து கப்பலை கொண்டு மோதி, மீனவர்களின் விசைப்படகை கடலில் மூழ்கடித்ததாக்க செய்திகள் வெளியாகின.
இதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற, நிலையில் அவர்கள் இருவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் மீனவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி கிஷாந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் இருவரும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த குடந்தை அரசன் பேட்டியளித்துள்ளார். அவரது முழு பேட்டியின் வீடியோ கீழே..