இலங்கை கிரிக்கெட்டுக்காக சிறந்த சேவையை செய்துள்ளார்! ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் உபுல் தரங்காவுக்கு புகழாரம்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உபுல் தரங்கா ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக இருந்த தொடக்க துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தரங்கா குறித்து இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறுகையில், உபுல் தரங்கா தனது தொழில் வாழ்க்கையில் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த சேவையைச் செய்துள்ளார்.
அவரது திறமைகள் மூலம் பல தேசிய அணி வெற்றிகளுக்கு பங்களித்திருக்கிறார் என கூறியுள்ளார்.
36 வயதான உபுதல் தரங்கா இறுதியாக 2019 ஆம் ஆண்டில் கேப்டவுனில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
