முதல் நாளே இங்கிலாந்திற்கு மரண அடி கொடுத்த அஸ்வின், குல்தீப்
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 218 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கடைசி டெஸ்ட்
தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. தொடக்க வீரர் பென் டக்கெட் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஓலி போப் 11 ஓட்டங்களிலும், அரைசதம் அடித்த ஜக் கிராவ்லே 79 ஓட்டங்களிலும் குல்தீப் சுழற்பந்தில் ஆட்டமிழந்தனர்.
குல்தீப் மிரட்டல்
100வது டெஸ்ட்டில் களமிறங்கிய ஜான் பேர்ஸ்டோவ் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதிரடி காட்டிய அவர் 29 (18) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது துருவ் ஜுரேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் ஜோ ரூட் (26), போக்ஸ் (24) ஓரளவு ஓட்டங்கள் சேர்க்க, அஸ்வின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
இறுதியில் அந்த அணி 218 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 4வது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |