சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: நியூசிலாந்தின் முக்கிய தலைகளை தூக்கிய குல்தீப்
நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி, ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) மற்றும் வில் யங் (Will Young) இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். இந்த கூட்டணி விரைவாக 50 ஓட்டங்களை கடந்தது.
What a spell by Kuldeep Yadav in the Champions Trophy Final.
— A D V A I T H (@SankiPagalAwara) March 9, 2025
Get Both Rachin Ravindra & KaneWilliamson #INDvsNZpic.twitter.com/tXIDpLOsjR
அணியின் ஸ்கோர் 57 ஆக உயர்ந்தபோது வில் யங் 15 ஓட்டங்களில் lbw ஆகி வெளியேறினார். அவரது விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி கைப்பற்ற, அடுத்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ் 11வது ஓவரின் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திராவை போல்டாக்கினார்.
இந்த விக்கெட் இந்திய அணிக்கு பெரும் நிம்மதி அளித்தது. ரச்சின் 37 (29) ஓட்டங்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து வந்த கேன் வில்லியம்சன் 11 ஓட்டங்களில், குல்தீப் யாதவ் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளான ரச்சின், வில்லியம்சன் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
SOFT DISMISSAL! 🎯#KuldeepYadav gets the big wicket of #KaneWilliamson, who spoons it back for an easy grab! 💥 Loud cheers, big celebrations—India on top! 🇮🇳🔥#ChampionsTrophyOnJioStar FINAL 👉 #INDvNZ | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 &… pic.twitter.com/U8zqp7Qu22
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |