CSKவில் இணைந்த குல்தீப் யாதவ் - ப்ளே ஆப் செல்ல உள்ள வாய்ப்புகள்
கலீல் அகமதுவுக்கு மாற்று வீரராக குல்தீப் யாதவ் CSKவில் இணைந்துள்ளார்.
CSKவில் இணைந்த குல்தீப் யாதவ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.

தற்போது அவருக்கு மாற்று வீரராக குல்தீப் யாதவை ரூ.30 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
Official Announcement
— Chennai Super Kings (@ChennaiIPL) May 15, 2026
Kuldip Yadav is Yellove!
A new warrior joins the pride! 💛🦁
Note: Kuldip Yadav replaces Khaleel Ahmed, who was ruled out due to injury.#WhistlePodu pic.twitter.com/XCe6esUKKe
குல்தீப் யாதவ் 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ப்ளே ஆப் செல்ல உள்ள வாய்ப்புகள்
CSK அணி, இன்று லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அடுத்து மே 18 ஆம் திகதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மே 21 ஆம் திகதி குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்கொள்ள உள்ளது.
12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள சென்னை அணி, அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு செல்லும்.
2 போட்டிகளில் வெற்றி பெற்றால், அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பை பெறும்.
இதே போல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து விலகிய நுவான் துஷாராவிற்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக CSKவிற்காக 2 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
🚨 𝗥𝗶𝗰𝗵𝗮𝗿𝗱 𝗚𝗹𝗲𝗲𝘀𝗼𝗻 𝗶𝗻 𝗥𝗲𝗱, 𝗕𝗹𝘂𝗲, 𝗮𝗻𝗱 𝗚𝗼𝗹𝗱 🚨
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 15, 2026
The English Speedster joins the Royal Challengers Bengaluru for the remainder of the #TATAIPL 2️⃣0️⃣2️⃣6️⃣ season, replacing Nuwan Thushara. ⚡❤️
Welcome, Richard! Time to wear the badge and #PlayBold. ❤️🔥 pic.twitter.com/VMmrNOm8mL
மேலும் கொல்கத்தா அணி ப்ளே ஆப் செல்லலும் வாய்ப்பை இழந்த நிலையில் அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக நாடு திரும்பியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |