ஆசிய கோப்பை T20 வடிவத்தில் புதிய சாதனை படைத்த குல்தீப் யாதவ்
ஆசிய கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
2025 ஆசிய கோப்பை
2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதி சூப்பர் 4 போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணி மோதியது. .
இந்த போட்டி டை ஆனதில், சூப்பர் ஓவர் சுற்றில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி, 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 1 விக்கெட் கைப்பற்றினார்.
இதன் மூலம், ஆசிய கோப்பை T20 வடிவத்தில் புதிய சாதனை ஒன்றை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.
குல்தீப் யாதவ் சாதனை
ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலம், இந்த தொடரில் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம், ஒரு ஆசிய கோப்பை T20 வடிவ தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரக வீரர் அம்ஜத் ஜாவீத் 2016 ஆசிய கோப்பை T20 வடிவ தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
குல்தீப் யாதவ், இந்த சாதனையை 6 போட்டிகளில் முறியடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |