பாகிஸ்தானுக்கு எதிராக திட்டங்களை வைத்திருந்தேன்! மொத்தமாக காலி செய்த இந்திய வீரர்
பாகிஸ்தானுக்கு எதிராக திட்டங்களை வைத்திருந்தேன் என குல்தீப் யாதவ் கூறினார்.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
2025 ஆசிய கோப்பை தொடரில், இந்தியா நேற்றைய தனது முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாட்டம் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து, 127 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக, சாஹிப்சாதா ஃபர்ஹான் 40 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இந்திய தரப்பில், குல்தீப் யாதவ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள்
தொடர்ந்து, 128 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 15.5 ஓவர்களில், 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 128 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் சூர்ய குமார் யாதவ் 47 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
குல்தீப் யாதவின் திட்டம்
4 ஓவர்கள் வீசி, 18 ஓட்டங்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்றிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இது குறித்து பேசிய குல்தீப் யாதவ், "பாகிஸ்தானுக்கு எதிராக திட்டங்களை வைத்திருந்தேன். துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்ப அதனை செயல்படுத்தினேன். முதல் பந்து விக்கெட் விக்கெட் விழும் பந்து என்ற மனநிலையிலே பந்தை வீச தொடங்கினேன்.
அந்த துடுப்பாட்ட வீரர் முதல்முறையாக என்னை எதிர்கொண்டார். நான் இன்னும் என் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அதிக மாறுபாடுகளை பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |