மாயாஜால சுழலில் மிரட்டிய குல்தீப் யாதவ்! 99 ஓட்டங்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா
குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்
ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்
டெல்லி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணி 99 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஜென்னேமன் மாலனை 15 ஓட்டங்களிலும், ஹென்றிக்ஸை 3 ஓட்டங்களிலும் சிராஜ் வெளியேற்றினார். அதன் பின்னரும் தென் ஆப்பிரிக்க அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது.
ICYMI! @imkuldeep18 & Shahbaz Ahmed hit the woodwork! ? ? #TeamIndia
— BCCI (@BCCI) October 11, 2022
South Africa lose Andile Phehlukwayo & Heinrich Klaasen.
Follow the match ? https://t.co/XyFdjVrL7K
Don’t miss the LIVE coverage of the #INDvSA match on @StarSportsIndia. pic.twitter.com/U8r2N7jYai
இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் மில்லரும் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் கிளாஸன் மட்டும் மறுபுறம் போராடினார். அப்போது குல்தீப் யாதவ் தனது மாயாஜால பந்துவீச்சை துவங்கினார். அவரது பந்துவீச்சில் சீட்டுக்கட்டுபோல் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.
இதனால் அந்த அணி 27.1 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹெய்ன்ரிச் கிளாஸன் 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
Twitter(@ICC)