பாகிஸ்தான் அணியை மொத்தமாக சிதைத்த இந்திய பந்துவீச்சு: 228 ஓட்டங்களில் அபார வெற்றி

Rohit Sharma Team India Pakistan national cricket team
By Arbin Sep 11, 2023 05:55 PM GMT
Report

ஆசிய கிண்ணம் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

தொடக்கம் முதலே அதிரடி

கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்தது.

பாகிஸ்தான் அணியை மொத்தமாக சிதைத்த இந்திய பந்துவீச்சு: 228 ஓட்டங்களில் அபார வெற்றி | Kuldeep Yadavs 5 Wicket Haul India Win 228 Runs

இதையடுத்து இந்தியா முதலில் துடுப்பாட்டம் செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவிக்க தொடங்கினர்.

இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தொடர்ந்து 2-வது முறையாக 100 ஓட்டங்களை தாண்டியது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் ரோகித் சர்மா 56 ஓட்டங்களிலும், சிறிது நேரத்திலேயே கில் 58 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பாகிஸ்தான் அணியை மொத்தமாக சிதைத்த இந்திய பந்துவீச்சு: 228 ஓட்டங்களில் அபார வெற்றி | Kuldeep Yadavs 5 Wicket Haul India Win 228 Runs

கே.எல்.ராகுல் ஆறாவது சதம்

பின் கள நடுவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோது மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அப்போது விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இருந்தனர். மழை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் திங்கட்கிழமை (ரிசர்வ் டே) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட, மழை நின்ற பிறகு மீண்டும் போட்டி தொடங்கி நடைபெற்றது. அதிரடியாக விளையாடிய விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சதமடித்து அசத்தினர்.

பாகிஸ்தான் அணியை மொத்தமாக சிதைத்த இந்திய பந்துவீச்சு: 228 ஓட்டங்களில் அபார வெற்றி | Kuldeep Yadavs 5 Wicket Haul India Win 228 Runs

இந்த சதத்தின் மூலம் கே.எல்.ராகுல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ஓட்டங்கள் குவித்தது.

விராட் கோஹ்லி 122 ஓட்டங்களும் கே.எல்.ராகுல் 111 ஓட்டங்களும் குவித்து அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து 357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 9 ஓட்டங்களில் பும்ரா வேகத்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் 10 ஓட்டங்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார்.

திணறிய பாகிஸ்தான்

ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே ரிஸ்வான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஃபகர் ஜமான் குல்தீப் யாதவ் வேகத்தில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 77 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பாகிஸ்தான் அணியை மொத்தமாக சிதைத்த இந்திய பந்துவீச்சு: 228 ஓட்டங்களில் அபார வெற்றி | Kuldeep Yadavs 5 Wicket Haul India Win 228 Runs

இதன் காரணமாக இஃப்திகார் அஹ்மத் - சல்மான் கூட்டணி நிதானமாக ஆடியது. இருப்பினும் இந்திய பந்துவீச்சை எதிகொள்ள திணறிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 228 ஓட்டங்களில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US