அசைக்க முடியாது! தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்ககாரா, ஜெயவர்தனே! எதில் தெரியுமா?
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பார்ட்னர்ஷிப் போட்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இப்பட்டியலில் இன்னும் அசைக்கமுடியாத வகையில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் மஹேலா ஜெயவர்தனே மற்றும் சங்ககாரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளனர்.
இருவரும் சேர்ந்து 624 ரன்கள் (2006ஆம் ஆண்டு) எடுத்ததே இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக திகழ்கிறது.
இந்த பட்டியலில் இரண்டாமிடத்திலும் இலங்கை வீரர்களே உள்ளனர். அதன்படி சனத் ஜெயசூர்யா - மஹானாமா ஜோடி 576 ரன்களை எடுத்தது இரண்டாவது சாதனையாக உள்ளது.
மூன்றாவது சிறந்த பார்ட்னர்ஷிப்பாக ம்கிரோவ் - ஜோன்ஸ் ஜோடி (467 ரன்கள்) உள்ளனர்.