மஹேலா ஜெயவர்தனேவுக்கு வாழ்த்து தெரிவித்த சக ஜாம்பவானும், நெருங்கிய நண்பருமான குமார் சங்ககாரா
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்த்தனேவை ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்த்து ஐசிசி கெளரவப்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு குமார் சங்ககாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி அமைப்பால் வழங்கப்படும் உயரிய கெளரவமாக ஹால் ஆப் ஃபேம் உள்ளது. கிரிக்கெட் விளையாட்டுக்கு பல்வேறு வகைகளில் சிறப்பான பங்களிப்பை தந்தவர்களுக்கு இந்த கெளரவம் வழங்கப்படும்.
அந்த வகையில் இந்தாண்டு இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனேவுக்கு ஐசிசி இந்த கெளரவத்தை அளித்துள்ளது.
Huge and well deserved congrats to @MahelaJay for being inducted into the @ICC Cricket Hall Of Fame. So much more to come and proud of the journey so far
— Kumar Sangakkara (@KumarSanga2) November 13, 2021
இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானும், ஜெயவர்தனேவின் நெருங்கிய நண்பருமான குமார் சங்ககாராவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், ஜெயவர்தனேவுக்கு பெரிய மற்றும் இந்த கெளரவத்திற்கு தகுதியான வாழ்த்துக்கள்.
இன்னும் அவருக்கு நிறைய வரவுள்ளது, அவரின் பயணத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.