ஐபிஎல் கோப்பையை எங்கள் அணி தான் தட்டி தூக்கும்! கெத்தாக பேசிய இலங்கை ஜாம்பவான் சங்ககாரா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனரும், தலைமை பயிற்சியாளருமான சங்ககாரா தங்கள் அணி இந்தாண்டு மிகவும் பலமாக உள்ளது என கூறியுள்ளார்.
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் திகதி முதல் துவங்க உள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யூஸ்வென்ற சஹால் ஆகியோர் ஒரே ஜோடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாட உள்ளது அந்த அணி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் தற்போதைய திகதியில் இந்திய அணியில் முன்னணி சுழல் பந்து வீச்சாளராக இருவரும் வலம் வருகின்றனர். அதே போல அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளது அணிக்கும் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனரும், தலைமை பயிற்சியாளருமான இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா கூறுகையில், ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த 2 சுழல் பந்துவீச்சாளர்கள் எங்கள் அணியில் விளையாட உள்ளனர்.
இவர்களுடன் ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, நவதீப் சைனி, கவுன்டர்-நைல், மெக்காய் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் எங்கள் பந்துவீச்சு கூட்டணி மிகச் சிறப்பாக உள்ளது.
எங்கள் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக காட்சியளிக்கிறது. இது போன்ற தரமான வீரர்கள் இருப்பதால் 2008-க்கு பின் இந்த சீசனில் ராஜஸ்தான் கோப்பையை வெல்லும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.