இவ்ளோ ரன்னையா வாரி வழங்குவது? ஒரு விக்கெட் கூட எடுக்கலயே.. ஐபிஎல்-லில் சொதப்பும் பிரபல வீரர் குறித்து வெளிப்படையாக பேசிய சங்ககாரா
இந்தாண்டு ஐபிஎல்லின் இரண்டாவது பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் அந்த அணியின் கிரிஸ் மோரிஸ் குறித்து குமார் சங்ககாரா பேசியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டம் படு மோசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற 43வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி படுமோசமாக தோற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின்போது ராஜஸ்தான் அணியின் சீனியர் வீரரான கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்களில் 50 ரன்னை விட்டுக் கொடுத்தது மிக மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் விளையாடிய எந்த போட்டியிலும் இதுவரை அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இது குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனரான இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா, கிரிஸ் மோரிஸ் இந்த இரண்டாம் பாதியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார் என்பது அவருக்கே தெரியும்.
மேலும் அவர் இதுவரை இங்கு விக்கெட்டை வீழ்த்தவில்லை. அதுமட்டுமின்றி ரன்களையும் அதிகம் விட்டுக் கொடுக்கிறார். நான்கு ஓவர்களுக்கு 50 ரன்கள் கொடுப்பது எல்லாம் மிகவும் மோசமான பந்துவீச்சு.
எங்கள் அணிக்காக அவர் சிறப்பான பங்களிப்பை அளித்து இருந்தாலும் இந்த இரண்டாம் பாதியில் சரிவர இல்லை என்று சங்ககாரா கூறியுள்ளார்.