10 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளோம்! இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் திரில் வெற்றி
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முத்லிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 3 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.
வெற்றிக்கு பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தமது வீரர்களை பாராட்டிய வீடியோவை அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது.
“Pls upload Sanga’s dressing room speech”
— Rajasthan Royals (@rajasthanroyals) April 13, 2023
Here you go. ?? pic.twitter.com/9Hx3h8n8GS
வீரர்களை பாராட்டி தள்ளிய சங்ககாரா
அதில் குமார் சங்ககாரா கூறுகையில், 'மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியிருந்தது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் கழித்து நாம் தான் வீழ்த்தியுள்ளோம். இது சாதனை வெற்றி.
பனிப்பொழிவு சூழலில் இவ்வாறு வெற்றி பெறுவது எளிதான விடயம் அல்ல. ஆனால் ஒரு அணியாக புத்திசாலித்தனமாக போட்டியை நாம் முடித்துள்ளோம். துடுப்பாட்டத்தை தொடங்கியதில் இருந்து., ஒவ்வொரு போட்டியிலும் ஜோஸ் பட்லர் உங்களை நான் வாழ்த்துகிறேன். இது சிறந்த அணுகுமுறை, சிறப்பு' என தெரிவித்துள்ளார்.
(Twitter/RR)
இவ்வாறாக அவர் ஒவ்வொரு வீரரையும் பாராட்டிய சங்ககாரா, வீரர்களை அனைவரையும் நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.
@PTI/R Senthil Kumar
@PTI photo