ஐபிஎல் ஏலத்தின் நடுவே சங்கக்காரா பார்த்த வேலை - இணையத்தில் வைரலாகும் வீடியோ
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியிலும் தேர்வு செய்து கொண்டனர்.
இதில் சக அணிகள் எதிரணியினர் நிச்சயம் எடுப்பார்கள் என்று இருக்கும் வீரர்களை எடுக்கப் போகும் நேரத்தில், வேண்டுமென்றே விலை ஏற்றி விட்ட சம்பவங்களும் அதிகமாக நடந்தன. அந்த வகையில் முதல் நாளில் இஷான் கிஷானை எடுக்க மட்டுமே கடுமையாக போட்டி போட்ட மும்பை அணி 2வது நாளில் அப்படியே தலைகீழாக செயல்பட்டு அடுத்தடுத்து வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
அதன்படி இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரை ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள், ஆர்ச்சரை எடுக்க போட்டி போட்டது. இதில் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் விலக மும்பையுடன் ஹைதராபாத் சண்டைக்கு சென்றது.
கடைசியில் மும்பை அணி ஆர்ச்சரை கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. பும்ரா - ஆர்ச்சர் என உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரே அணியில் இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை அணி ஜோஃப்ரா ஆர்ச்சரை ஏலத்தில் எடுக்க முயன்ற சமயத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா சிறப்பான சம்பவம் ஒன்றில் ஈடுபட்டார். அதாவது மும்பை அணி ஏலம் கேட்டுக் கொண்டிருந்த போது மற்ற அணிகளை நோக்கி நீங்களும் கேளுங்கள் என சங்கக்கரா கண்ணாலேயே சைகை காட்டுகிறார்.
ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டால் மும்பை அணியின் தொகை ஏறும். இன்னொரு பக்கம் ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை அணி வாங்க முடியாமல் கூட போகலாம். இதற்காக மற்ற அணிகளையும் களத்தில் இறக்க, சங்கக்காரா உசுப்பி விடுவது போல் அதில் காட்சிகள் உள்ளது.
Moment of #IPLAuction2022 ?? @KumarSanga2 dipped 2cr from #mi kitty with this#IPL2022MegaAuction #sangakkara #RajasthanRoyals #MumbaiIndians #ipl pic.twitter.com/y0o1ZAONTf
— Vamsi Praneeth (@vamsipraneethd) February 13, 2022