உலகளவில் கருணையை பிறப்பிக்கட்டும்: புத்த பூர்ணிமாவுக்கு குமார் சங்ககாரா வாழ்த்து
புத்த பூர்ணிமாவுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புத்த பௌர்ணமி
கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவற்றை நினைவுகூரும் பௌத்தர்களின் முக்கிய பண்டிகை புத்த பௌர்ணமி அல்லது புத்த பூர்ணிமா ஆகும்.
இது மே மாதம் பௌர்ணமி நாளில் பல நாடுகளில் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் புத்தரின் போதனைகள் மற்றும் தர்மத்தை நினைவுகூர்வதால், பௌத்த மதத்தில் அது ஒரு புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது.
சங்ககாரா
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் குமார் சங்ககாரா புத்த பூர்ணிமாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அவரது பதிவில், "இந்த வெசாக் பண்டிகை நம் அனைவரின் இதயங்களையும், மனதையும் அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடனும், மென்மையாகவும் அன்புடனும் இருக்க ஒளிரச் செய்யட்டும். இது உலகளவில் நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் இரக்கத்தையும் பச்சாதாபத்தையும் பிறப்பிக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
May this Vesak illuminate all our hearts and minds to be kind, gentle and loving towards all beings. May it universally birth compassion and empathy in our thoughts, words and actions.
— Kumar Sangakkara (@KumarSanga2) May 12, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |