நாய் குறுக்கே வந்ததால் பறிபோன காவலரின் உயிர்!
தமிழக மாவட்டம் குமரியில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காவலர், நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் செம்மான்விளை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் (40). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 4ஆம் திகத்தி வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் பெனடிக்ட் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர் அருவுபொற்றை பகுதியில் சென்றபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் பெனடிக்கின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.
நிலைதடுமாறிய அவர் சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால் ஓடையில் விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெனடிக்ட்டை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பொலிஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |