இனி இட்லி தோசைக்கு இது தான் சரி - கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி?
Potato
Healthy Food Recipes
Idli
By Kirthiga
கும்பகோணம் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இந்த உணவானது மிகவும் பிரபலமானது. இது தற்போது உலக அளவில் வைரலாகி வருகின்றது எனறே கூறலாம்.
அதிக தண்ணியாகவும் இல்லாமல் அதிக கெட்டியாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் இந்த குழம்பை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
அந்தவகையில் கும்பகோணம் கடப்பா எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பருப்பு உருளைக்கிழங்கு வேகவைக்க
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- உருளைக்கிழங்கு - 3
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர்
மசாலா விழுது அரைக்க
- துருவிய தேங்காய் - 1 கப்
- பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
- கசகசா - 1 தேக்கரண்டி
- சோம்பு - 1 தேக்கரண்டி
- பூண்டு - 6 பற்கள்
- இஞ்சி
- பச்சை மிளகாய் - 10
- தண்ணீர்
கும்பகோணம் கடப்பா செய்ய
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- பிரியாணி இலை
- பட்டைகிராம்பு
- ஏலக்காய்
- அன்னாசிப்பூ
- சோம்பு - 1 தேக்கரண்டி
- வெங்காயம் - 2
- கறிவேப்பிலை
- தக்காளி - 2 நறுக்கியது
- உப்பு - 1 தேக்கரண்டி
- தண்ணீர்
- கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
- ஒரு பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீர், அரை கப் பாசி பருப்பு, நறுக்கின 3 உருளை கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, கலந்து, குக்கர் மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும்.
- குக்கர் விசில் வந்ததும் வேக வைத்த உருளை கிழங்கை மட்டும் தனியாக எடுத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
- ஒரு மிக்ஸியில் துருவிய அரை கப் தேங்காய், 2 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஆறு பல் பூண்டு, ஒரு துண்டு நறுக்கிய இஞ்சி, பத்து பச்சை மிளகாய் ,தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- ஒரு அகலமான கடாயில், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சோம்பு , நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, நறுக்கிய 2 தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- அரைத்த மசாலா விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்கவிடவும்.
- கலவை நன்றாக கொதித்ததும், வேக வைத்த பருப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
- இறுதியாக மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும். பத்து நிமிடம் கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான கும்பகோணம் கடப்பா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US