சினிமா வாய்ப்பு பறிபோனதால் சீரியலில் நடிக்கும் வைரல் பெண் மோனாலிசா
மகா கும்பமேளாவில் மாலை விற்று பிரபலமான காந்த கண் அழகி தான் மோனாலிசா போஸ்லே.
இவரின் வைரலான வீடியோகளை பார்த்து பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா டைரி ஆஃப் மணிப்பூர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
ஆனால் தற்போது மோனாலிசாவுக்கு பட வாய்ப்பை வழங்கிய சனோஜ் மிஸ்ரா, பட வாய்ப்பு கொடுப்பதாக பெண் ஒருவரை ஏமாற்றி விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன் ஜாமீன் கேட்டு சனோஜ் மிஸ்ரா நீதிமன்றத்தை நாடிய போதிலும், நீதிமன்றம் இவரது ஜாமீனை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மோனலிசா முதல் படத்தில் நடிக்க துவங்கிய நிலையில், இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளதால் இவரின் திரையுலக வாழ்க்கை கேள்வி குறியாக மாறியுள்ளது.
ஆனால் மோனலிசா, திரைப்படம் வெளியாகாவிட்டாலும் அவர் ஏற்கனவே ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டார்.
சினிமாவுக்காக பயிற்சி பெற்று வரும் மோனலிசாவு கடை திறப்பு விழா, ஊர் திருவிழாவின் விருந்தினர் என பல நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொள்கிறார்.
தற்போது அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் புக் ஆகியுள்ளன என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கேரளாவில் நகைக்கடை திறப்பு விழாவில் மோனலிசா கலந்து கொண்டார். நேபாளத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியிலும் விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மோனலிசா விருந்தினராக கலந்து கொள்கிறார்.
சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதால் டைரி ஆஃப் மணிப்பூர் திரைப்படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மோனலிசா இப்போது தான் நடிக்க கற்று வருகிறார் என்பதால் உடனடியாக பட வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது..
ஆனால் தகவல்களின்படி மோனலிசா சீரியலில் நடிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
கெஸ்ட் ரோலில் முக்கிய சீரியலில் மோனலிசா நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |