முதன்முறையாக 5 ஸ்டார் ஹொட்டலில் சாப்பிட்ட கும்பமேளா மோனாலிசா.., வைரலாகும் புகைப்படம்
மகா கும்பமேளா மூலம் வைரலான மோனாலிசா என்ற பெண், முதன்முறையாக 5 ஸ்டார் ஹொட்டலில் சாப்பிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
5 ஸ்டார் ஹொட்டல்
மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலானார்.
திரை நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வந்தது.
இதையடுத்து, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மணிப்பூரில் நடந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட டைரி ஆஃப் மணிப்பூர் திரைப்படத்தில் மோனாலிசாவை ஒப்பந்தம் செய்தார்.
இதில், மூத்த நடிகர் அனுபம் கெர் சித்தரித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகளாக மோனாலிசா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
இதனிடையே, பிப்ரவரி 14 -ம் திகதி அன்று கேரளாவின் கோழிக்கோடுக்கு மோனாலிசா விமானத்தில் பயணம் செய்தார். அங்கு, தொழிலதிபர் பாபி செம்மனூர் தொகுத்து வழங்கிய கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், அவர் தனது குடும்பத்துடன் உணவகத்தில் உணவருந்தும் மற்றொரு புகைப்படம் வெளிவந்துள்ளது. தற்போது வைரலாகும் இந்த புகைப்படத்தில் அவருக்கு படம் கொடுத்த இயக்குனரும் இருக்கிறார்.
அதாவது வைரல் பெண் மோனாலிசா, இயக்குனர் சனோஜ் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உணவருந்துகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |