கும்பமேளா மோனலிசாவுக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு.., இணையத்தை கலக்கும் புதிய தோற்றம்
மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசா மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ள நிலையில் அவரது புதிய தோற்றம் இணையத்தில் பரவி வருகிறது.
புதிய தோற்றம்
மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலானார்.
திரை நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வந்தது.
இதையடுத்து, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மணிப்பூரில் நடந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட டைரி ஆஃப் மணிப்பூர் திரைப்படத்தில் மோனாலிசாவை ஒப்பந்தம் செய்தார்.
இதையடுத்து, இந்த இயக்குநர் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டதால் மோனோலிசா போஸ்லேவின் சினிமா வாய்ப்பு தடைபட்டது.
இருந்தாலும் அவர் பல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அண்மையில் கேரள நிகழ்ச்சி ஒன்றில் கூட கலந்து கொண்டு வைரலானார்.
இந்நிலையில்,மலையாள சினிமாவில் நடிகர் கைலாசுடன் இணைந்து நாகம்மா என்ற படத்தில் நடித்து வருகிறார் மோனோலிசா.
இதற்கான பூஜை வெளியீட்டு விழாவிலும் மோனோலிசா கலந்து கொண்டுள்ள நிலையில் தற்போது அவரின் புதிய தோற்றம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |