கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் இல்லை.., நடிகை சர்ச்சை கருத்து
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் இல்லை என்று நடிகையும், பா.ஜ.க. எம்பியுமான ஹேமமாலினி கூறியுள்ளார்.
ஹேமமாலினி பேசியது
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு, மவுனி அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, அதிகாலை முதலே லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவதற்கு குவிந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிய சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிலர் கீழே விழுந்தனர். பின்னர், அவர்கள் மீது மற்றவர்களும் விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. எம்பியுமான ஹேமமாலினி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நாங்கள் கும்பமேளாவுக்கு சென்று நன்றாக குளித்தோம்.
நன்றாக நிர்வகிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டது சரிதான். ஆனால், அது ஒரு பெரிய சம்பவம் அல்ல. அது எவ்வளவு பெரியது என எனக்குத் தெரியவில்லை. இது மிகைப்படுத்தப்படுகிறது.
கும்பமேளா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. நிறைய பேர் அங்கு வருகிறார்கள். நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |