இடுப்பு வரை நீளமாக கூந்தல் வளர இந்த ஒரு எண்ணெய் போதும்: எப்படி பயன்படுத்துவது?
ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர குங்குமாதி எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- குங்குமாதி எண்ணெய்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் குங்குமாதி எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும்.
பின் இந்த கலவையை சூடாக்கி, உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் மசாஜ் செய்யவும்.
அடுத்து 1 மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பூ கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இது உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது, முடியை பலப்படுத்துகிறது மற்றும் பிரகாசத்தை சேர்க்கிறது.
2. தேவையான பொருட்கள்
- குங்குமாதி எண்ணெய்- 1 ஸ்பூன்
- வாழைப்பழம்- 1
- தேன்- 1 -ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் குங்குமாதி எண்ணெய், மசித்த வாழைப்பழம் மற்றும் தேன் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும்.
பின் இதனை உங்கள் தலைமுடியில் தடவி, 30 நிமிடங்களுக்கு பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த ஹேர்மாஸ்க் முடியை ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது.
மேலும், இது மென்மையாகவும் பளபளப்பாகவும் முடியை மாற்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |