மாதம்பட்டி ரங்கராஜின் 2வது திருமணம்.., குக் வித் கோமாளியில் மறைமுகமாக கலாய்த்த கோமாளி
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியில் நடுவர்களிள் ஒருவராக மாதம்பட்டி ரங்கராஜும் இருக்கிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ்.
2019ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி பெயர் ஸ்ருதி.
கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டு சமூக வலைதளத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்தனர்.
மேலும், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குக் வித் கோமாளியில் மாதம்பட்டி ரங்கராஜ் 3 நடுவர்களுள் ஒருவராக இருக்கிறார்.
மூன்று நடுவர்களையும் அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் நீதி, நேர்மை, நியாயம் என்றுதான் அறிமுகம் கொடுப்பர்.
குரேஷி செஞ்சு விட்டாப்ல 😂
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) August 23, 2025
ஷோ பாக்கும்போது எனக்கே தோனுச்சு ☺️ pic.twitter.com/YdZOABrwdM
அதன்படி, கடந்த எபிசோடில் ரக்ஷன், அவர் தாங்கைய்யா நீதி என்று ரகுவரன் வேடம் போட்டிருந்த குரேஷியிடம் கூறினார்.
அதற்கு குரேஷி, அவரா நீதி? அவர் முகத்தை பார்த்து நீதி என்று சொல்லிவிட்டு ஒரு 10 வினாடி சிரிக்காமல் இருங்கள் பார்ப்போம் என்றார்.
இதை பார்த்துவிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் அவரை இறங்கி வந்து அடித்தார். இது தற்போது இணையத்தில் பேசபொருளாக மாறியிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |