மின்சாரம், செல்போன் என எதுவும் பயன்படுத்தாமல் வாழும் கிராம மக்கள்: எங்கு உள்ளனர் தெரியுமா?
இன்றைய காலத்தில் மின்சாரம் இல்லாத வீடு இல்லை.மின்சாரம் இல்லாத உலகம் கற்பனை செய்ய முடியாது என்று சொல்லலாம்.
இந்த காலத்தில் மின்சாரம், எரிவாயு, விளக்குகள், மின்விசிறிகள், மோட்டார்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் வாழும் ஒரு கிராமம் இருக்கிறது.
ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் இந்த குர்மா கிராமம் அமைந்துள்ளது.
இங்கு வாழும் மக்கள் பழங்கால வாழ்க்கை முறைப்படியே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மின்சாரப் பயன்பாடு இன்றியே வசித்து வருகின்றனர்.
இந்த குர்மா கிராமத்தில் எல்லா வீடுகளும் சுண்ணாம்பு மற்றும் மண் சேர்த்துக் கட்டப்படும் கட்டுமானத்தால் ஆனது.
இந்த வீடுகளின் சமையலறையில் விறகு அடுப்பு தான் உள்ளது. இதில் தான் வீட்டில் உள்ள அனைவருக்கும் உணவு சமைக்கப்படுகிறது.
மேலும் வீட்டின் படுக்கையறைகளில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அலமாரிகள் உள்ளன.
இந்த வீட்டின் உள்ளே உள்ள அனைத்துத் தளங்களும் மாட்டுச் சாணம் கலந்த சேற்றால் மெழுகப்பட்டிருக்கும். இதனால் பாக்டீரியாக்கள் வராது.
இந்த வீட்டின் கழிவறை பயன்படுத்திய பிறகு, அதில் சாம்பல் தூவப்படுகிறது.
இதன்மூலம் அந்த கழிவு சிதைவடைகிறது, பின்னர் அந்தக் கழிவை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |