19 பேர் பலியான பேருந்து தீ விபத்து - உயிரிழப்பிற்கு 234 செல்போன்கள் காரணமா?
19 பேர் பலியான கர்னூல் பேருந்து தீ விபத்து குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்னூல் பேருந்து தீ விபத்து
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் தெகுரு கிராமம் அருகே நேற்று அதிகாலையில், பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில், இரு சக்கர வாகனம் மோதியதில் பேருந்தின் டீசல் டேங்க் சேதமடைந்து தீ விபத்து ஏற்பட்டது.

தீயில் கருகி, திருப்பூரை சேர்ந்த 22 வயதான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஆம்னி பேருந்தின் மீது ஏற்கனவே 16 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இருக்கைக்கு அனுமதி பெற்று, படுக்கை வசதி கொண்ட பேருந்தாக மாற்றியதும் தெரிய வந்துள்ளது.
போலியாக ஓட்டுநர் அட்டை
அதே போல், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவசங்கர் மதுபோதையில் இருந்துள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆம்னி வால்வோ பேருந்து ஓட்டுநரான மிரியாலா லக்ஸ்மையா, 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், 10ம் வகுப்பு படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து லைசென்ஸ் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இவர், 2004 ஆம் ஆண்டில் ஒரு லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்தபோது அருகிலுள்ள மரத்தில் மோதியதில், கிளீனர் உயிரிழந்துள்ளார்.ஆனால் லட்சுமையா உயிர் தப்பினார்.
234 ஸ்மார்ட்போன்கள்
இதே போல், பேருந்தில் தீ அதிகளவில் பற்றியதற்கு பேருந்தில் 234 ஸ்மார்ட்போன்கள் காரணமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த மங்கநாத் என்ற தொழிலதிபர், வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக பெங்களூருவில் அமைந்துள்ள இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு 234 ஸ்மார்ட்போன்களை அனுப்பியுள்ளார். அத்துடன் பேருந்தின் ஏசிக்கு பயன்படுத்தும் பேட்டேரிகளிலும் தீ பற்றியுள்ளது.
பேருந்தில் தீ அதிகரித்ததற்கு பேட்டரி மற்றும் செல்போன்கள் வெடித்தது காரணமாக இருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகன எடையைக் குறைத்து வேகத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பிற்குப் பதிலாக இலகுரக அலுமினியத்தைப் பயன்படுத்தியதும் விபத்தின் தீவிரத்தை அதிகரித்துள்ளது என ஆந்திர பிரதேச தீயணைப்புத் துறை தலைமை இயக்குநர் பி. வெங்கடரமணா தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |