பிரித்தானியாவில் பூனையை தூக்கிப்போட்டு ஃபுட்பால் ஆடிய வீரர்! விதிக்கப்பட்ட தண்டனை..
பிரித்தானியாவில் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனையை தூக்கிப்போட்டு பந்தாடிய கால்பந்தாட்ட வீரருக்கு அபராதமும், சிறிய தண்டனையும் கடுக்கப்பட்டது.
பிரித்தானியாவின் West Ham கால்பந்தாட்ட அணியின் பிரபல வீரர் Kurt-Zouma, அவரது வீட்டு பூனையை ஓங்கி அறைவதும், கையில் பிடித்து தூக்கி போட்டு ஒரு கால்பந்தைபோல் கிக்-ஷாட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் உதைத்த உதையில் அந்த பூனை பறந்து சென்று விழுகிறது, மேலு அவர் வேகமாக அறையும் போதும் தலைகுப்பறை விழுந்து எழுந்து ஓடுகிறது, அதுமட்டுமின்றி அவர் நாத பூனையை கடும் கோபத்துடன் விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
லண்டனில் வசித்துவரும் Kurt-Zouma தனது 2 மில்லியன் மதிப்புள்ள வீட்டில் வளர்க்கப்படும் அந்த பெங்கால் பூனையை இவ்வாறு கொடுமைபடுத்தியுள்ளார்.
Not a cat guy myself but to actually Zidane volley a living creature is a different level of mental illness.
— Footy Limbs (@FootyLimbs) February 7, 2022
Kurt Zouma you should be utterly ashamed of yourself. Disgrace. pic.twitter.com/J8ZotP8zyR
இந்த அக்காட்சிகள் இனையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, இந்த வீடியோ குறித்த கண்டங்கள் குவிந்ததால், தனது செயலுக்காக Kurt-Zouma மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், தற்போது அந்த பூனை நலமுடன் இருப்பதாகவும் அதை நல்ல முறையில் பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அவருக்கு 250,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது 2 வார சம்பளமாகும். மேலும், அவர் அடுத்த ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அவர் வீட்டில் வளர்க்கப்பட்ட இரு பூனைகளையும் பிரித்தானியாவின் 'விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டி' (RSPCA) பறிமுதல் செய்துள்ளது.