குருந்தூர் மலையில் நேற்று நடந்தது என்ன..!பெண்கள் மீது பொலிஸார் கை வைதார்களா?
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் நேற்று தேவாரம் பாடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக பொலிஸார் கலைக்க முயன்றதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் மீது பொலிஸார் கை வைத்தார்களா?
முல்லை தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் வெள்ளிக்கிழமையான நேற்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு பொங்கல் இடும் நிகழ்வினை அப்பகுதியில் நடத்த இருப்பதாக ஆதி சிவன் ஐயனார் ஆலய நிர்வாக அமைப்பினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.
இதையடுத்து குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவு மாறாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரையின் விகார அதிபதி, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தமிழ் மக்களின் இந்த ஏற்பாட்டுக்கு எதிராக சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் நேற்று இருதரப்பினர் இடையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அப்போது தேவாரம் பாடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக எழுப்பி கலைக்க பொலிஸார் முற்பட்டனர்.
மேலும் அப்போது அங்கிருந்த பெண்களை பெண் பொலிஸாரின் உதவி இல்லாமல், ஆண் பொலிஸார்கள் மிக கேவலமான முறையில் அணுகி அவர்களை தள்ளி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் கீழே உள்ள வீடியோவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |